Header Ads



முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் பற்றிய ஒரு நோக்கு நூல் வெளியீடு


- ஏ.எச்.ஏ. ஹுஸைன் -


ஆய்வுக்கும் மேம்பாட்டுக்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றியத்தினால், காத்தான்குடியில் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் பற்றிய ஓர் இஸ்லாமிய  நோக்கு எனும்  நூல் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.


மேற்படி மகளிர் ஒன்றியத்தின்  நிறைவேற்றுப் பணிப்பாளர் அனீஸா தலைமையில் செவ்வாய்க்கிழமை 01.08.2023 இரவு இடம்பெற்ற இந்நிகழ்வில் நூலாசிரியர் கலாநிதி றவூப் ஸெய்ன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.


நூல் விமர்சனத்தை தென்கிழக்குப் பல்கலைக் கழக சமூக விஞ்ஞானப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.வை.எம். சுஹீறா மேற்கொண்டார்.


இந்த நூல் நீண்ட காலமாக இலங்கையில் நடைமுறையில் இருந்து வரும் முஸ்லிம் தனியார் சட்டத்தின் ஒரு பகுதியான முஸ்லிம் விவாக விவாக ரத்துச் சட்டத்தின் வரலாறு, பிரதான உள்ளடக்கம் என்பவற்றோடு சீர்திருத்த முயற்சிகள் பற்றிய சுருக்க அறிமுகத்தைத் தருவதோடு எந்தெந்தப் பகுதிகளில் திருத்தம் வேண்டுமெனக் கோரப்படுகின்றதோ அப்பகுதிகளில் ஷரிஆ கண்ணோட்டங்களையும் சட்டவியலாளர்களின் பிக்ஹ{ கண்ணோட்டங்களையும் செலுத்துவதே இந்நூலின் பிரதான நோக்கமாகும்.


அந்த வகையில் பிக்ஹு  ஷரீஆ, கானூன் வேறுபாடுகளையும் மத்ஹப் பற்றிய விவாதத்தையும் முன்னிறுத்தும் இந்நூல் திருமண வயது பலதார மணம், பெண்களை நீதிபதிகளாய் நியமித்தல், வலி, திருமணத்தைப் பதிவு செய்தல் போன்ற பல்வேறு விவகாரங்களைப் பரந்துபட்ட விவகாரங்களை இஸ்லாமிய வாழ்வியல் நெறிமுறைக் கண்ணோட்டத்தில்  அலசுகிறது என ஆய்வுக்கும் மேம்பாட்டுக்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.




No comments

Powered by Blogger.