Header Ads



"கடைகளில் விலை காட்டப்படாத பொருட்களை, இலவசமாக எடுத்துச் செல்லுங்கள்"


கடைகளில் விலை காட்டப்படாத அனைத்துப் பொருட்களையும் இலவசமாக எடுத்துச் செல்லுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை மக்களுக்கு அறிவித்துள்ளது.


அதிகாரசபையின் அதிகாரிகள் புறக்கோட்டையில் உள்ள ஆடைக்கடைகள் உட்பட பல கடைகளில் சோதனை நடத்தியதில் பெரும்பாலான பொருட்களின் விலைகள் காட்சிப்படுத்தப்படவில்லை என கண்டறியப்பட்டது.


எனவே, விலை காட்டப்படும் தயாரிப்புகள் மட்டுமே பணம் செலுத்தமாறும் விலை காட்சிப்படுத்தப்படாத அனைத்து பொருட்களையும் இலவசமாக பெற்றுக்கொள்ளுமாறு மக்களுக்கு அதிகாரசபையின் தலைவர் சட்டத்தரணி சாந்த நிரியெல்ல அறிவித்துள்ளார்.


நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்டத்திற்கமைய, ஒவ்வொரு பொருளின் விலையையும் காட்சிப்படுத்துவது கட்டாயமாகும்.


எனினும் பெரும்பான்மையான கடைக்காரர்கள் அதை மீறி வியாபாரத்தில் ஈடுபடும் நிலையில் விலை காட்டாத ஒவ்வொரு பொருளையும் மக்களுக்கு இலவசமாகப் பெற்றுத் தருமாறு அறிவித்தால் இந்த நடைமுறையை அமுல்படுத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.


எப்படியிருப்பினும் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை நுகர்வோர் அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் அடையாளம் காணப்பட்ட 13,493 பேருக்கு 13 கோடி ரூபாவிற்கும் அதிகமான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. இந்த அரசாங்கத்தின் புதிய ஏற்பாடுகளுக்கு நன்றிகள். எங்கேயாவது விலை குறிக்கப்படாது காட்சிக்கு வைக்கப்பட்ட பொருட்களை நாம் இலவசமாக எடுத்துக் கொள்ளும் போது கடைக்காரர்கள் பொலிஸாருக்கு அறிவித்தால் அல்லது வாடிக்கையாளர்களான எம்மை கைது செய்தால் நாம் அவர்களுக்கு காட்டிவிட்டு தப்ப முடியமான அரச சுற்றுநிருபத்தையும் இங்கு பதிவிடவும். அப்போது கடைகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு வீட்டின் லிஸ்ட்டுக்கான பொருட்களை இலவசமாகப் பெற்றுக் கொண்டு குறைந்தது இரண்டு நேரமாவது பசியாரச் சாப்பிடலாம்.

    ReplyDelete

Powered by Blogger.