Header Ads



செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம்


போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த வேலைத்திட்டம் நேற்று (12) குருநாகலில் ஆரம்பிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.


வடமேல் மாகாணத்தில் மாத்திரம் 77,000 செவித்திறன் குறைபாடுள்ளவர்கள் இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.


அவர்களுக்கு கடந்த காலங்களில் சட்டப்பூர்வ சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.


ஆனால் ஏனைய நாடுகளில் இவ்வாறான விசேட தேவையுடையவர்கள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நாடுகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட செயல்திறன்மிக்க பயிற்சியாளர்களை கொண்டு இந்த அனுமதி பத்திரம் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.