Header Ads



வெளிநாட்டிலுள்ள இலங்கை தொழிலாளர்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம்...


தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையானது வெளிநாட்டிலுள்ள  இலங்கை தொழிலாளர்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.


 இதனை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை இணைந்து செயற்படுத்தப்படும்.


03 முறைகள் மூலம் இந்த வீடுகளை நிர்மாணிக்க எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முதல் முறை சொந்த காணியில் வீடு கட்டுவது. இரண்டாவது, நகரத்திற்கு வெளியே அவர்கள் விரும்பும் பகுதியில் காணியற்றவர்களுக்கு வீடுகள் கட்டுவது. மூன்றாவது முறை அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவது.


இந்த வீடமைப்புத் திட்டத்திற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நிதியுதவி வழங்குவதுடன், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படும். இது தொடர்பான கூட்டு அமைச்சரவை பத்திரம் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட உள்ளது. வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் இணையத்தளம் ஏற்கனவே வீடமைப்புத் தேவையிலுள்ள வெளிநாட்டுப் பணியாளர்கள் தொடர்பில் கணக்கெடுப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளதுடன், அதற்காக ஏறக்குறைய 1000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், மாவட்ட மட்டத்திலும் வீடுகள் தேவைப்படும் வெளிநாட்டு தொழிலாளர் குடும்பங்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.



முனீரா அபூபக்கர்

No comments

Powered by Blogger.