Header Ads



ஆயுதங்களை தயாரித்து விற்பனை செய்துவந்த தந்தையும், மகனும் கைது


கல்எலிய பிரதேசத்தில் பல்வேறு வகையான துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் தயாரிப்பில் ஈடுபட்டதாக கூறப்படும் தந்தை மற்றும் மகன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இவ்வாறு தயாரிக்கப்பட்ட பல பொருட்களுடன் இருவரும் கலெலிய பிரதேசத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த துப்பாக்கிகள் மற்றும் பாகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.


இரண்டு துப்பாக்கிகள், இரண்டு துப்பாக்கி உறைகள், இரண்டு பிரித்தெடுக்கப்பட்ட ஏர் ரைபிள்கள், பல்வேறு துப்பாக்கிகளின் பல பாகங்கள், ஈயத் தொகுதிகள், ஈயப் பந்துகள், ஈயப் பந்துகள் தயாரிக்கப் பயன்படும் கருவி, தயார் செய்யப்பட்ட ஈயப் பந்துகள் நிரப்பப்பட்டு பதப்படுத்தப்பட்ட பொருட்கள், வெடி மருந்துகள், வெடி மருந்துகளை நிரப்ப பயன்படுத்தப்படும் வெற்று தோட்டாக்கள் மற்றும் பல கத்திகளும் கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் அடங்கும் என குறிப்பிடப்படுகின்றது..


இவற்றை உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.


இந்த இடத்தில் தயாரிக்கப்பட்ட சில ஆயுதங்கள் 40000 ரூபா தொடக்கம் பல்வேறு விலைகளில் பாதாள உலகக் கும்பல் உறுப்பினர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.


தந்தை மற்றும் மகன் இருவரும் வெளிநாட்டில் பணியாற்றிய அனுபவத்தின் அடிப்படையில் இந்த தொழிலை சில காலமாக ரகசியமாக நடத்தி வந்துள்ளனர்.


இங்கு தயாரிக்கப்படும் துப்பாக்கிகள் பல்வேறு குற்றக் குழுக்களுக்கு வாடகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments

Powered by Blogger.