"மௌனமாக இருந்துவிட்டு நமது உரிமைகள் பறிபோய் விட்டனவே என அங்கலாய்க்க வேண்டாம்"
- Mohamed Ismail Rifana -
இன்று -29- நீதியமைச்சில் முஸ்லிம் விவாகரத்து சட்டம் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.
முஸ்லிம் நாடுகளில் பெண் காதி இருக்கின்றனர் என தர்க்கிப்போருக்கு எது ஷரீஆவை பின்பற்றும் நாடு..? நாட்டை பின்பற்றுவதா ..?குர்ஆன் சுன்னாவை பின்பற்றுவதா ...? என பெண்கள் தரப்பில் தெளிவுபடுத்தப்பட்ட போது, இந்தோநேஷியா முஸ்லிம்களும், நாமும் கலாச்சாரத்தில் வேறுபட்டவர்கள் என்பதை நீதியமைச்சர் விளங்கிவைத்திருந்தார் என்பதை விளங்க முடிந்தது.
பெண் காதி, பெண் விவாகப்பதிவாளரை சட்ட திருத்தத்தில் உள்வாங்கக்கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இன்றோடு இந்த முயற்சி நிறைவு பெறுவதாக கருதி விடக் கூடாது இலங்கை பூராவும் இருக்கக்கூடிய சமூக ஆர்வலர்கள் தொண்டு நிறுவனங்கள் ஆலிம்கள் பெண்கள் என பல தரப்பட்டவர்களும் இணைந்த குழுக்களாக சேர்ந்து நீதி அமைச்சரை சந்தித்து இவ்விடயங்கள் பற்றி பல கோணத்திலும் தெளிவுபடுத்தப்பட வேண்டிய அவசியம் இருக்கின்றது என்பதை இன்றைய எனது அவதானிப்பு உணர்த்தியது.
சில அரச சார்பற்ற நிறுவனங்களின் கெடுபிடிகள் சம்பந்தமாக அவ்வப்போது நீதி அமைச்சருக்கு நினைவூட்ட வேண்டியதும் எமது கடப்பாடாகும் இவர்கள் மார்க்கத்திற்காக போராடுகிறவர்கள் அல்ல முஸ்லிம்கள் தீர்மானம் எடுக்க வேண்டியது எதை அடிப்படையாகக் கொண்டு யாரைக்கொண்டு என்பதை அவ்வப்போது நீதி அமைச்சருக்கு தெளிவுபடுத்துதல் அவசியம் என்பதை இன்றைய நிகழ்வு உணர்த்தியது.
நாம் முக்கியமான தருணத்தில் இருக்கின்றோம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு சமர்ப்பிப்பதற்கு முன்னதாக நீதி அமைச்சரை சந்தித்து ஒட்டுமொத்த சமூகத்தின் தீர்க்கமான முடிவை முன் வைப்பது நம் சமூகத்திற்கு ஆரோக்கியமாக அமையும் மௌனமாக இருந்துவிட்டு நமது உரிமைகள் பறிபோய் விட்டனவே என அங்கலாய்ப்பது காலம் கடந்த ஞானமாக இருக்கப் போகின்றது
உண்மையிலும் உண்மை!
ReplyDelete