மற்ற இமாம்களுக்குக் கிடைக்காத, ஒரு சிறப்பு இந்த இமாமிற்கு
அஷ்ஷைக் அப்துல்லாஹ் அவாத் அல்ஜுஹனி ஹபிழஹுல்லாஹ் மக்கா ஹரம் ஷரீபின் 9 இமாம்களில் ஒருவர்.
47 வயதாகும் இந்த இமாமிற்கு மற்ற இமாம்களுக்குக் கிடைக்காத ஒரு சிறப்பு இவருக்குக் கிடைத்துள்ளது.
அது நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வரலாற்றில் இடம்பெற்ற 4 மஸ்ஜித்களில் இமாமாகப் பணியாற்றும் நல்வாய்ப்பு.
குர்ஆன் ஆய்வு துறையில் BA பட்டமும், பின் Ph.d பட்டமும் பெற்றவர். முதலில் மஸ்ஜித்கிப்லதைனிலும், பின் மஸ்ஜித் நபவியிலும், பின் மஸ்ஜித் குபாவிலும் இமாமாகப் பணியாற்றினார்.
பின் 2007ஆண்டு முதல் மஸ்ஜித் ஹராமில் இமாமாகப் பணியாற்றி வருகிறார்.
- Ismail Najee -
Post a Comment