Header Ads



நாமலின் மின்சாரக் கட்டணத்தை செலுத்தத் தயார் - ராஜாங்க அமைச்சர் அறிவிப்பு


நாமல் ராஜபக்ஷவின் திருமண நிகழ்விற்காக மின்சார சபைக்கு செலுத்தவேண்டிய , 25 இலட்சம் ரூபாவை செலுத்தத் தயார் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, எனத் தெரிவித்துள்ளார்.


நாமல் ராஜபக்ஷ அல்லது மஹிந்த ராஜபக்ஷ கோரினால் இந்த தொகையை தனது தனிப்பட்ட பணத்தில் இருந்து செலுத்த தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.


அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோதே இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த இதனை கூறினார்.


நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண நிகழ்விற்காக மின்சார சபைக்கு இதுவரை 26 இலட்சம் பணம் செலுத்தப்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் உறுப்பினர் நளின் ஹெவகே குற்றஞ்சாட்டியுள்ளார்.


எவ்வாறாயினும், இவ்வாறான சம்பவத்துடன் தொடர்புடைய மின்சாரக் கட்டணம் இதுவரை தமக்கு வரவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டை மறுத்துள்ளார். 

No comments

Powered by Blogger.