இப்படியும் ஒரு பொலிஸ் அதிகாரி
ஆராச்சிக்கட்டுவ பகுதி பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நோய்வாய்ப்பட்ட தனது தாயை பார்க்க விடுமுறை வழங்கப்படாத காரணத்தினால் தனது வேலையை இராஜினாமா செய்துள்ளார்.
பொலன்னறுவை, புலஸ்திகம பிரதேசத்தில் வசிக்கும் பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு பொலிஸ் சேவையில் இருந்து விலகிச் சென்றுள்ளார்.
பணிக்கு வந்து 60 நாட்களாகியும் விடுமுறை எடுக்காமல் தனது கடமைகளை செய்ததாகவும், தாய்க்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை அறிந்து விடுமுறைக்கு விண்ணப்பித்தும் விடுமுறை வழங்கப்படவில்லை எனவும் பொலிஸ் கான்ஸ்டபிள் தெரிவித்துள்ளார்.
குறித்த பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிள் கடந்த 25 ஆம் திகதி சேவையை விட்டு வெளியேறியதாக ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
Post a Comment