Header Ads



நேர்த்தியாக நெய்யப்பட்ட ஆகாயத்தின் மீது சத்தியமாக...!


இதுவே (Observable universe) " காட்சிக்குட்பட்ட பேரண்டத்தில்" உள்ள மிகப் பிரமாண்டமாக அண்டமாகும். 


இந்த விண்மீன் கொத்துக்கள் ஈர்ப்பு விசையால் பிணைக்கப்பட்டு, பாஸ் கிரேட் வால் எனப்படும் வாயுக்களால் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட வீண்மீன் தொகுப்புக்களின் தொடராகும். 


இது நமது பூமியிலிருந்து 5 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. மேலும் நமது பால்வீதி போல 830 தனித்தனி விண்மீன் திரள்களைக் கொண்டுள்ளது. மேலும் நமது பால்வீதியை விட சுமார் 10,000 மடங்கு பெரியது.


இதன் பிரமாண்டத்தை இலகுவாக விளக்குதென்றால் நமது பூமிக் கிரகம் சூரிய குடும்பம் என்ற நட்சத்திர மண்டலத்தை சுற்றி வருகிறது. நமது பால்வெளியில் சூரிய குடும்பம் போன்ற 


200 பில்லியனுக்கும் அதிகமான விண்மீன்  குடும்பங்கள் இருக்கின்றன. 


இப்போது, ​​இந்த எண்கள் அனைத்தையும் 10,000 ஆல் பெருக்கிப் பாருங்கள்! அதுதான் படத்தில் உள்ள விண்மீன் கொத்தின் பிரமாண்டமாகும்!


((நேர்த்தியாக நெய்யப்பட்ட ஆகாயத்தின் மீது சத்தியமாக!))


📖 அல்குர்ஆன் : 51:7

✍ தமிழாக்கம் / imran farook

No comments

Powered by Blogger.