Header Ads



கடும் பாதுகாப்பில் விமான நிலையம்

இலங்கையில் இருந்து வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது விமான நிலைய தகவல்களுக்கு அமைய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.


இதன் காரணமாக 3 இடங்களில் புறப்படும் பயணிகளுக்கு ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்வதனால் போக்குவரத்து மற்றும் பயணிகள் எதிர்கொள்ளும் சிரமத்தை கருத்தில் கொண்டு 2 இடங்களில் மட்டும் சிறப்பு ஸ்கேன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக விமான நிலைய நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதேவேளை, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 446 கமராக்களில் இருந்து பெறப்பட்ட படங்கள் உட்பட பாதுகாப்பு CCTV கமரா அமைப்புடன் கூடிய குழு மூலம் 24 மணி நேர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


புறப்படும் மற்றும் வருகை முனையங்களில் சாதாரண உடையில் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் மூன்று ஆயுதப்படைகள் அடங்கிய குழுக்கள் பணியாற்றி வருவதாக விமான நிலைய நிறுவனம் தெரிவித்துள்ளது.


No comments

Powered by Blogger.