Header Ads



கோட்டாபய வாயை திறக்க வேண்டுமென கோரிக்கை


13ஆவது திருத்த சட்டம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது மௌனத்தைக் கலைக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜெயசுமன வேண்டுகோள் விடுத்துள்ளார்.


அண்மையில் ஊடகம் ஒன்றிற்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


மேலும், 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஜனாதிபதியின் முயற்சிகளை மீண்டும் கடுமையாகக் கண்டிக்கின்றேன்.


இவ்வாறு தேசத்தின் நலன்களுக்காக பாதகமான விதத்தில்  அரசாங்கம் செயற்பட முயல்வதால் கோட்டாபய ராஜபக்ச தொடர்ந்தும் அமைதியாகியிருக்க முடியாது.


2019ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச வென்ற ஐந்து வருடப் பதவிக் காலத்தை பூர்த்தி செய்வதற்காக நாடாளுமன்றம் ரணில் விக்ரமசிங்கவை தெரிவு செய்தது.


பயங்கரவாதத்திற்கு எதிரான வெற்றியைப் பிரதிபலிக்கும் புதிய அரசமைப்பு என்ற வாக்குறுதியின் அடிப்படையில், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய எவ்வாறு மௌனமாக இருக்க முடியும்.


முன்னாள் ஜனாதிபதி இந்த விடயத்தில் தெளிவான நிலைப்பாட்டை எடுக்காவிட்டால் தற்போதைய நிகழ்ச்சி நிரலுக்கு அவர் மறைமுக ஆதரவு என்ற தவறான கருத்தை ஏற்படுத்தலாம் என சன்ன ஜெயசுமன குறிப்பிட்டுள்ளார்.


எனவே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது மௌனத்தைக் கலைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

1 comment:

  1. இந்த சுமன யாருக்காகக் குரல் கொடுக்கின்றார். எல்லாச் சட்டங்களும் நிறைவேற்றுவதற்கும் திரையின் பின்னால் இருப்பது மஹிந்த கள்ளக்கூட்டத்தின் திட்டங்கள் தான் என்பதை இப்போது பொதுமக்கள் நன்றாக விளங்கிக் கொண்டார்கள். இதனை திசை திருப்புவதற்கு சுமன போடும் தந்திரம் தான் இது என்பது போல் தெரிகிறது. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டியிருக்கின்றது.

    ReplyDelete

Powered by Blogger.