Header Ads



இதயத்தில் புகுந்த எதிரி


இரவு பத்து மணி­ய­ளவில் அக்­க­ரைப்­பற்று வைத்­தி­ய­சா­லையின் மருத்­துவ விடு­தியில் புதி­தாக அனு­ம­திக்­கப்­பட்ட நோயா­ளர்­களை பார்­வை­யிட்டு கொண்­டி­ருந்தேன். VOG யின் மொபைலில் இருந்து அழைப்­பொன்று வந்­தது. ஒரு ப்ரெக்னன்ட் மதர் மூச்­சுத்­தி­ண­ற­லோட வந்­தி­ருக்கா… எங்­கட சைட் பிரச்­சினை போல தெரி­யல, கொஞ்சம் வந்து பார்க்க முடி­யுமா? “ என்று கேட்டார். உடனே அவ­சர சிகிச்சை பிரி­விற்கு சென்­ற­போது 33 வய­தான ஒரு பெண் மூச்­சுத்­தி­ண­ற­லோடு மிகவும் அவஸ்­தைப்­பட்டுக் கொண்­டி­ருந்தார். அவ­சர சிகிச்சை வைத்­தியர் ஒக்­சிஜன் வழங்­கி­யி­ருந்­த­போதும் அத்தாய் மிகவும் சிர­மப்­பட்டுக் கொண்­டி­ருந்தார். மொனிட்­டரில் அவ­ரது இத­யத்­து­டிப்பு 148 ஆக இருந்­தது. 


ஏதோ மிகவும் சீரி­ய­சான பிரச்­சினை ஒன்று போய்க்­கொண்­டி­ருப்­பதை உணர்ந்து கொண்டேன். இத­யத்­து­டிப்பு நீண்ட நேரத்­திற்கு அதி­க­ரித்துக் காணப்­பட்டால் அது இத­யத்தை பல­வீ­னப்­ப­டுத்­தி­விடும். ஒரு கட்­டத்தில் இதயம் செய­லி­ழந்து இறப்பை ஏற்­ப­டுத்தும்.


பொது­வாக எமது இத­யத்­து­டிப்பு நிமி­டத்­துக்கு 70-80 ஆக இருக்கும், 100 ஐ விட அதி­க­ரித்த இத­யத்­து­டிப்பு பொது­வாக நோய் அறி­கு­றி­யாகும். 150 ஐ நெருங்­கிய இத­யத்­து­டிப்பு பொது­வாக ஆபத்­தா­னது. இத­யத்தில் அல்­லது சுவாசத் தொகு­தியில் சிக்­க­லான நோய்கள் ஏற்­ப­டும்­போது இத­யத்­து­டிப்பு மிகவும் அதி­க­ரித்துக் காணப்­படும். அதிலும் குறிப்­பாக கர்­பி­ணித்­தாய்­மாரில் ஏற்­படும் அதி­க­ரித்த இத­யத்­து­டிப்பு மிகவும் ஆபத்­தா­ன­தாக இருக்­கலாம். வழ­மை­யாக கர்ப்­பிணிப் பெண்கள் ஏதா­வது நோயோடு வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­ப­டும்­போது அதீத கவனம் செலுத்­தப்­படும். 


ஏனெனில் இலங்­கையில் தாய்மார் இறப்பு வீதம் வரு­டத்­திற்கு 29/100000 ஆக காணப்­ப­டு­கி­றது. அதா­வது ஒரு­வ­ரு­டத்தில் ஒரு இலட்சம் குழந்­தைகள் பிறக்­கும்­போது 29 தாய்மார் இறந்து போகின்­றனர். இது ஏனைய தெற்­கா­சிய நாடு­க­ளுடன் ஒப்­பி­டும்­போது மிகக் குறைந்த அள­வாகும். (ஆப்­கா­னிஸ்தான்-638, பாகிஸ்தான் – 276, இந்­தியா – 174, பங்­க­ளாதேஷ்- 173). இந்த இறப்­புக்­களை மேலும் குறைப்­ப­தற்கு எமது சுகா­தார அமைச்சு பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­றது. என­வேதான் இத்­தாயும் மிகவும் சிரத்­தை­யோடு கவ­னிக்­கப்­பட்டார். கர்ப்­பிணிப் பெண்­க­ளுக்கு ஏற்­ப­டக்­கூ­டிய ஆபத்­தான நோய் நிலை­மைகள் என் கண்­முன்னே ஓடிக்­கொண்­டி­ருந்­தன. 


சுவாச நோய்கள் ஏற்­ப­டும்­போது மூச்­சுத்­தி­ண­றலும் அதி­க­ரித்த இத­யத்­து­டிப்பும் ஏற்­படும். ஆனால் இப்­பெண்ணின் சுவா­சப்­பை­களை சோதித்­த­போது அவை தெளி­வாக இருந்­தன. 2 நாட்­க­ளாக இலே­சான காய்ச்சல் இருந்­ததை தவிர வேறு எந்த பிரச்­சி­னை­களும் இருந்­தி­ருக்­க­வில்லை. மிக முக்­கி­ய­மாக பல்­ம­னரி எம்­பொ­லிசம் ( pulmonary embolism ) எனும் மிக மிக ஆபத்­தான நோய்­நிலை கர்ப்­பி­ணி­க­ளுக்கு ஏற்­ப­டலாம். இரத்தம் உறை­வ­டைந்து சுவாசப் பையின் இரத்தக் குழாய்­களில் அடைத்துக் கொள்­வதால் இது ஏற்­ப­டு­கி­றது. சில வேளை­களில் கர்ப்பப் பையினுள் உள்ள திரவம் இரத்தக் குழா­யினுள் கசிந்து சுவாச இரத்தக் குழாய்­களில் அடைப்­ப­த­னாலும் இது ஏற்­ப­டலாம். இது உயி­ரா­பத்­தான நிலை­யாகும். முறை­யாக சிகிச்சை அளிக்­கப்­ப­டா­விட்டால் தாயும் குழந்­தையும் இறப்­ப­தற்­கான வாய்ப்­புள்­ளது. எனவே அதற்­கான பரி­சோ­த­னை­க­ளையும் உட­ன­டி­யாக மேற்­கொண்டோம். ECG எடுக்­கப்­பட்­டது. நேரம் நடு­நி­சியை தொட்­டுக்­கொண்­டி­ருந்­த­போது எக்கோ பரி­சோ­த­னையும் மேற்­கொள்­ளப்­பட்­டது.


இரத்த மாதி­ரிகள் வைத்­தி­ய­சா­லை­யிலும் தனியார் ஆய்­வு­கூ­டங்­க­ளுக்கும் அனுப்­பப்­பட்­டன. பரி­சோ­தனை முடி­வுகள் பல்­ம­னரி எம்­பொ­லி­சத்­திற்கு சாத­க­மாக இருக்­க­வில்லை. இது ஓர­ள­வுக்கு ஆறு­த­லாக இருந்த போதும் 140ஐ தாண்­டிய அத்­தாயின் இத­யத்­து­டிப்பு அச்­சு­றுத்திக் கொண்டே இருந்­தது. ஏனைய பரி­சோ­த­னை­களும் மேற்­கொள்­ளப்­பட்­டன. அடுத்து மிக முக்­கி­ய­மாக கவ­னத்தில் கொள்ள வேண்­டி­யது Viral myocarditis – வைரல் மயோ­கார்­டைடிஸ் எனும் இத­யத்­தசை அழர்ச்­சி­யாகும். (அலர்ஜி அல்ல).


Viral myocarditis – வைரல் மயோ­கார்­டைடிஸ் என்­பது மிக அரி­தாக ஏற்­ப­டக்­கூ­டிய ஒரு நோயாகும். Europian society of Cardiology யின் அறிக்­கையின் படி இந்­நோயை கண்­ட­றி­வது மிகவும் சிர­ம­மா­னது. பொது­வாக இந்­நோயை கண்­ட­றி­வ­தற்கு இத­யத்தின் தசையின் நுண்­ணிய பகுதி இழை­ய­வியல் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட வேண்டும் (heart muscle biopsy). இது உயி­ரோ­டி­ருக்கும் ஒரு­வரில் செய்­யப்­ப­டு­வது மிக மிக சிர­ம­மா­னது. அத்­தோடு இந்­நோயை கண்­ட­றி­வதில் நவீன மருத்­துவ உலகில் பல்­வேறு பரி­சோ­தனை முறைகள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. Cardiac MRI எனப்­படும் இத­யத்தை MRI ஸ்கேன் செய்­வதன் மூலம் இத­யத்தின் தொழிற்­பாட்டை மிகத் துல்­லி­ய­மாக கணிப்­பி­டலாம். 


இத­யத்­த­சைகள் வெளி­யிடும் இர­சா­யன பதார்த்­தங்­களை (Cardiac biomarkers) இரத்­தத்தில் பரி­சோ­திப்­பதன் மூலமும் இந்­நோயை கண்­ட­றி­யலாம். ஆனால் இவற்றை அக்­க­ரைப்­பற்று வைத்­தி­ய­சா­லை­போன்ற ஒரு சாதா­ரண ஆதார வைத்­தி­ய­சாலை ஒன்றில் நாம் எதிர்­பார்க்க முடி­யாது. எனவே இந்­நோயை கண்­ட­றி­வ­தற்கு சிறந்த அனு­ப­வமும் மருத்­துவ ஆளு­மையும் அவ­சி­ய­மா­கி­றது. 


இதனால் வைரல் மயோ­கார்­டைடிஸ் நோயை ஆரம்­பத்­தி­லேயே கண்­ட­றிந்து சிகிச்சை அளிப்­பது மிகவும் சவா­லா­ன­தா­கவே உள்­ளது. வரு­டாந்தம் ஒரு இலட்சம் சனத்­தொ­கையில் 22 பேருக்கு இந்நோய் ஏற்­ப­டு­கி­றது. இதில் 6 பேர் மர­ணிக்­கின்­றனர். ஆனால் கர்ப்­ப­கா­லத்தில் இந்நோய் ஏற்­படும் போது இறப்பு வீதம் மேலும் அதி­க­ரிக்­கின்­றது. இவ்­வா­றான பல்­வேறு தடை­க­ளையும் தாண்டி ஒரு கர்ப்­பி­ணித்­தாயை சிகிச்சை அளிப்­பது மிகப்­பெரும் சவா­லாகும்.


மயோ கார்­டைடிஸ் பல்­வேறு கார­ணங்­களால் ஏற்­ப­டு­கின்­ற­போ­திலும் வைரஸ் தொற்­றுக்­களே பிர­தான கார­ண­மாக உள்­ளது. கொக்­ஸகி B, இன்­பி­ளு­வென்ஸா, பர்வோ B (Coxsackie B, influenza, Parvo B) போன்ற வைரஸ்கள் இத­யத்தை அதிகம் தாக்­கு­கின்­றன. இந்தப் பெண்ணும் இரு­தி­னங்­க­ளாக தடிமன் காய்ச்சல் ஏற்­பட்­டி­ருந்­த­தனால் இவ­ருக்கு வைரல் மயோ­கார்­டைடிஸ் ஏற்­பட்­டி­ருக்­கலாம் என சிகிச்­சை­களை ஆரம்­பித்தேன். மிகக் கவ­ன­மாக அவ­ரது நாடித்­து­டிப்பு, சுவாச வீதம், ஒக்­சிஜன் அளவு என்­பன கண்­கா­ணிக்­கப்­பட்­டன. 


தொண்­டை­யி­லி­ருந்து சளி மாதிரி எடுக்­கப்­பட்டு பரி­சோ­த­னைக்­காக கொழும்பு மருத்து ஆய்வு நிறு­வ­னத்­திற்கு அனுப்பி வைக்­கப்­பட்­டது. வைரஸ் கொல்லி மருந்தும் வழங்­கப்­பட்­டது. அப்­பெண்ணின் உற­வி­னர்கள் மட்­டு­மல்­லாது வைத்­தி­ய­சாலை ஊழி­யர்­களும் பதற்­ற­மா­கவே அன்று இரவைக் கழித்­தனர். அதி­காலை நான்கு மணி­ய­ளவில் அப்­பெண்ணின் இத­யத்­து­டிப்பு மெது­வாக குறை­வ­டைய ஆரம்­பித்­தது. காலையில் அவ­ரது மூச்சுத் திணறல் குறை­வ­டைந்து இத­யத்­து­டிப்பு வீதம் 120 ஐ தொட்டிருந்தது. காலை உணவை சிரமமின்றி அவரால் சாப்பிட முடிந்தது. படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட 2ம் நாள் அவர் தானாக நடந்து இயங்க ஆரம்பித்தார். ஐந்து நாட்கள் தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டது. கருவில் இருந்த குழந்தையின் ஆரோக்கியமும் வைத்தியர்களால் இடைக்கிடையே சோதிக்கப்பட்டது. 


ஆறாம் நாள் இதயத்துடிப்பு சாதாரண நிலைக்கு வந்த போது அத்தாயும் வழமை போன்று “எப்ப சேர் டிக்கட் வெட்டுவீங்க? “ என்ற கேள்வியை அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தார். “அம்மா இப்ப ஒங்களுக்கு எல்லாம் நல்லம். இதயம் இப்ப நோர்மலா வேல செய்யுது. இண்டக்கி மட்டும் ஒப்சேவ் பண்ணிட்டு நாளைக்கி டிக்கட் வெட்டுவம் “ என்று சொன்னபோது அத்தாயின் மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் சிறகடித்துப் பறந்தன.- Vidivelli


Dr. MSM. Nusair

MBBS, MD (col)

Consultant physician (acting)

Base hospital- Akkaraipattu


No comments

Powered by Blogger.