கொழும்பு மாவட்டம் குறித்து, வெளியான கவலையான தகவல்
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் தலைமையில் 16 பேர் உள்ளடங்கிய குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
கொழும்பு நகரில் ஆறு இலட்சம் மக்கள் வசிக்கும் அதேவேளையில் நாளாந்தம் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியிடங்களில் இருந்து கொழும்புக்கு வந்துச் செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மக்கள் உட்கொள்ளும் பெரும்பாலான உணவுகள் வீணடிக்கப்படுவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின்படி, கொழும்பு மாவட்டத்தில் உணவு வீணாக்கப்படுவது தேசிய அளவில் உணவுப் பொருட்களின் விலை உயர்வை எவ்வாறு பாதிக்கிறது என்பது விளக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உணவுப் பொருட்களின் விலைகள் 128 வீதத்தால் அதிகரித்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட பணவீக்கம் தொடர்பான அறிக்கையின் தரவுகளை மேற்கோள்காட்டி அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உணவு அல்லாத பொருட்களின் விலை மட்டம் 87 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நுகர்வோர் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை மட்டத்தில் சராசரியாக 103 சதவீதம் அதிகரிப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
கொழும்பு நகர எல்லையில் உணவுப் பொருட்களின் விலை 136 வீதத்தால் அதிகரித்துள்ளது.
2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படாததே இதற்குக் காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Post a Comment