Header Ads



பரம வைரியைத் தோற்கடித்து முதல்முறையாக அல் நாஸருக்கு பட்டத்தை வென்று கொடுத்த ரொனால்டோ


அல்-ஹிலாலுக்கு எதிராக 2023 அரபு கழக சாம்பியன்ஸ் கோப்பை பட்டத்தை வெல்ல அல்-நாஸருக்கு வழிகாட்ட கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டு கோல்களை அடித்தார்.


சவுதி அரேபிய மைதானத்தில் சனிக்கிழமையன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், 51வது நிமிடத்தில் அல்-ஹிலால் அணியின் மைக்கேல் கோல் அடித்தார்.


எனினும் போட்டியின் 74வது நிமிடத்தில் ரொனால்டோ கோலை சமன் செய்து ஆட்டத்தை கூடுதல் நேரத்திற்கு கொண்டு சென்றார், இதன்போது வெற்றி கோலை அடித்து அல் நாஸர் கழகத்திற்கு பட்டத்தையும் வென்று கொடுத்துள்ளார்.


ரொனால்டோ, சாடியோ மானே, செகோ ஃபோபானா, மார்செலோ ப்ரோசோவிக், ஆண்டர்சன் தலிஸ்கா, அலெக்ஸ் டெல்லெஸ் என பல நட்சத்திரங்களைக் கொண்ட அல்-நாஸர், வரலாற்றில் முதல் முறையாக அரபு கழக சாம்பியன்ஸ் கோப்பையை வென்றுள்ளது.


இந்த கோடையில் ஐரோப்பிய கழகங்களில் இருந்து வெளியேறிய செர்ஜஜ் மிலின்கோவிக்-சாவிக், ரூபன் நெவ்ஸ், மால்கம் மற்றும் கலிடோ கவுலிபாலி ஆகியோரை முன்னாள் சாம்பியன் அல்-ஹிலால் ஒப்பந்தம் செய்திருந்தது.


இந்நிலையில், இந்த முறையாகவும் கிண்ணத்தை வெற்றிகொள்ளும் முனைப்புடன் களமிறங்கிய அல்-ஹிலால் அணிக்கு ரொனால்டோ பெரும் சவாலாக இருந்திருந்தார்.


இதன்படி, இறுதிப் போட்டிக்கு சவுதி அரேபியாவைச் சேர்ந்த பரம வைரிகளான அல் ஹிலால் மற்றும் அல் நாஸர் கழகங்கள் தகுதிபெற்றிருந்தன.


நட்சத்திரம் நிறைந்த அல்-நாஸர் அணிக்கு முதல் பாதியில் கோல் அடிக்க பல வாய்ப்புகள் கிடைத்தன. போட்டியின்


எனினும், போட்டியின் 74 வது நிமிடத்தில் 38 வயதான ரொனால்டோ கோல் அடித்து சமன் செய்திருந்தார்.


தொடர்ந்து கூடுதல் நேரத்தில் 98 வது நிமிடத்தில் ரொனால்டோ மற்றுமொரு கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தருந்தார்.




No comments

Powered by Blogger.