9 வயதுச் சிறுமியின் மரணம் படுகொலையா..? தற்கொலையா..??
சிலாபம் இரணைவில பிரதேசத்தில் ஒன்பது வயது சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தனது மகள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதையடுத்து, சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக சிறுமியின் தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
சிறுமியின் தாயார் வெளிநாட்டில் உள்ளதால், சடலத்தின் பிரேத பரிசோதனை மற்றும் நீதிபதி பரிசோதனை இன்று நடைபெறவுள்ளது.
இது கொலையா ? தற்கொலையா என்பது குறித்த மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
Post a Comment