Header Ads



ஹம்திக்காக ஆஜராகிய 8 சட்டத்தரணிகள் - நீதவான் பொலிஸாருக்கு வழங்கிய உத்தரவு


ஹம்தியின் வழக்கு  இன்று 02.08.2023 விசாரணைக்கு வந்தது.  சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் தலைமையில் 8 சட்டத்தரணிகள் மன்றில் ஆஜராகினர்.  மருத்துவரும், சட்டத்தரணியுமான YLM யூசுப், சட்டத்தரணி நாமல் ராஜபக்க்ஷ ஆகியோர் இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.


கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் மூன்று வயது குழந்தையின் சிறுநீரக சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.


சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் இன்று (02) கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய முன்னிலையில் சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.


இதன்போது சிறுநீரக சத்திரசிகிச்சையின் பின்னர் கிருமி தொற்று காரணமாக கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதும் 03 மாதங்கள் வயதுடைய ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்தது.


வைத்தியர்களின் அலட்சியமே குழந்தையின் மரணத்திற்கு காரணம் என பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ள நிலையில் மேற்படி உத்தரவை நீதிமன்றம் விடுத்துள்ளமை குறிப்புடத்தக்கது

No comments

Powered by Blogger.