தென்னாப்பிரிக்காவில் பயங்கர தீ விபத்து - 63 பேர் மரணம் (படங்கள்)
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 63 பேர் உயிரிழந்துள்ளதாக தென்னாப்பிரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜோகன்னஸ்பர்க் நகரின் மையத்தில் உள்ள ஐந்து மாடிக் கட்டிடத்தில் தீ பரவியுள்ள நிலையில் தீயிற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை என ஜோகன்னஸ்பர்க் அதிகாரிகள் கூறுகின்றனர்.
தீயில் சிக்கியுள்ள பலரை , தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்தில் கட்டிடம் எரிந்து சேதமாகியுள்ளதாகவும், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
Post a Comment