Header Ads



கட்டார் ஏர்வேஸ் ஒரு நாளைக்கு 6 முறையும், துருக்கிய ஏர்லைன்ஸ் வாரத்தில் 7 நாட்களும் இலங்கைக்கு வருகிறது


இஸ்ரேலின் அகிரா ஏர்லைன்ஸ் ஒக்டோபர் 31ஆம் திகதி முதல் வாரத்திற்கு இரண்டு முறை இலங்கைக்கு நேரடி விமான சேவையை மேற்கொள்ளவுள்ளதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


கடந்த 19ஆம் திகதி ஹில்டன் ஹோட்டல் குழுமத்தின் அதி சொகுசு ஹோட்டலான ஹில்டன் யால ரிசார்ட் திறப்பு விழாவில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.


“ஜனாதிபதியின் வழிகாட்டலுடன் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக பல வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளோம்.இன்று இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வர ஆரம்பித்துள்ளனர்.


ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் விளைவாக இந்தியாவில் இருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் எமது நாட்டுக்கு வருகின்றனர். மூன்றாவதாக, சீனாவிலிருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் நம் நாட்டிற்கு வருகிறார்கள். அனைத்து விமான நிறுவனங்களும் இலங்கைக்குத் வரத் தொடங்கியுள்ளன, கட்டார் ஏர்வேஸ் தற்போது ஒரு நாளைக்கு ஆறு முறை இலங்கைக்கு பறக்கிறது.


துருக்கிய ஏர்லைன்ஸ் இலங்கைக்கு விமானங்களை இயக்குகிறது மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வாரத்தில் ஏழு நாட்களும் இலங்கைக்கு பறக்கிறது. எதிர்வரும் ஒக்டோபர் 31ஆம் திகதி முதல் வாரத்திற்கு இரண்டு முறை இலங்கைக்கு நேரடி விமான சேவையை மேற்கொள்ளவுள்ளதாக இஸ்ரேலின் அகிரா விமான சேவை அறிவித்துள்ளது. எதிர்காலத்தில் மேலும் பல விமானங்கள் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.