Header Ads



அதிகளவு ஊழல் நிலவும் 5 முக்கிய திணைக்களங்கள் - அமைச்சர் கூறிய தகவல்


 இலங்கையின் முக்கிய ஐந்து திணைக்களங்களில் அதிகளவான ஊழல் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக போக்குவரத்து, பெருந் தெருக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.


இதனால் குறித்த திணைக்களங்கள் தற்போது பாரிய நட்டத்தை எதிர்நோக்குவதாக கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் தெரிவித்துள்ளார்.


சுங்க திணைக்களம், மதுவரி திணைக்களம், உள்நாட்டு இறைவரி திணைக்களம், தொடருந்து மற்றும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் ஆகியவற்றில் அதிகளவான ஊழல் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக போக்குவரத்து, பெருந் தெருக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.


இத்திணைக்களங்களை நவீன மயமாக்குவதன் ஊடாக ஊழல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியுமென அவர் கூறியுள்ளார்.


அத்துடன், அரச வருமானத்தை 50 வீதத்தால் அதிகரிக்க முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.


மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தை நவீன மயப்படுத்தும் நடவடிக்கைக்கு பல்வேறு வடிவங்களில் எதிர்ப்புகள் வந்தாலும் குறித்த நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.


மேலும், இலங்கையில் தற்போது பயன்படுத்தப்படும் வாகனங்களில் 20 வீதமானவை சட்டவிரோதமான முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.