Header Ads



5 குழுக்களாக உடைந்துள்ள மொட்டு


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தற்போது ஐந்து குழுக்களாக பிரிந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.


தொலைக்காட்சி ஒன்றின் அரசியல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


மேலும் கூறுகையில்,தற்போது அரசாங்கமாக உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் 3 குழுக்கள் இயங்குகின்றன.


அத்துடன் அரசாங்கத்தில் இருந்து வெளியேறியுள்ள இரண்டு குழுக்களும் உள்ளன. எனவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தற்போது ஐந்து குழுக்களாக பிரிந்துள்ளது.


பொதுஜன பெரமுனவில் உள்ள சிலர் மீண்டும் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவை தெரிவு செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர்.


மற்றும் சிலர் அவ்வாறான தீர்மானத்தை மேற்கொள்ளவில்லை என குறிப்பிடுகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.