ஸ்ரீலங்கன் ஏர்லைன் விமானத்தால் நீர்கொழும்பில் 50 கோடி ரூபா நஷ்டம்
UL 303 என்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன் விமானத்தால் சேதப்படுத்தப்பட்ட நீர்கொழும்பு கிராமத்திற்கு உடனடியாக இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என ‘மகேன் ரட்ட’ அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
அண்மையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான UL 303 ரக விமானம் தாழப் பறந்ததால் நீர்கொழும்பு தகொன்ன கிராமத்தில் பல வீடுகள் சேதமடைந்தன.
இங்கு 50 கோடி ரூபாவுக்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டது. இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ‘மகேன் ரட்ட’ அமைப்பு நேற்று (30) செய்தியாளர் சந்திப்பை நடத்தியது.
அரசாங்கம் 50 கோடி அல்ல 100 கோடி பணத்தை அந்த பாதிக்கப்பட்ட ஊர் மக்களுக்கு வழங்குவார்கள என எதிர்பார்க்கப்படுகின்றது.
ReplyDelete