ரயிலில் கண்டுபிடிக்கப்பட்ட 50 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியான நகைகளும் பொருட்களும்
கண்டி, கட்டுகஸ்தோட்டை குஹாகொட பகுதியைச் சேர்ந்த லக்சிறி சம்பத் மற்றும் அவரது மனைவி ஹிருணி நிமாஷா ஆகியோர் ரயிலில் பையை மறந்து சென்றுள்ளனர்.
தம்பதியினர் கண்டியிலிருந்து அவரது வீட்டிற்குச் சென்று அங்கிருந்து மீண்டும் கண்டிக்கு இந்த ரயிலில் வந்துள்ளனர்.
ரயிலில் அமர்ந்திருந்த போது அவர்களது பயணப் பைகள் சில இருக்கைக்கு அடியில் வைக்கப்பட்டு கோட்டையிலிருந்து இறங்கும் போது பையை எடுக்க மறந்து விட்டனர்.
இலங்கையில் வீதியில் கிடந்த பெருந்தொகை தங்கம், சொத்துப் பத்திரங்கள் - தம்பதிக்கு காத்திருந்த அதிர்ச்சி | Gold Rate Today Colombo Colombo Matara Train
இந்நிலையில் மாத்தறை ரயில் பாதுகாப்பு உத்தியோகத்தர் அலுவலகத்தின் சோதனையின் போது, பாதுகாப்பு அதிகாரிகள் பையை கண்டுபிடித்து மாளிகாவத்தை ரயில்வே பாதுகாப்பு அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
பையில், 3 பவுன் தங்க நெக்லஸ், பிரேஸ்லட், ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐபோன், 35 லட்சம் ரூபாய் சேமிப்பு சான்றிதழ், வங்கி புத்தகங்கள், கார் உரிமம் உள்ளிட்ட தங்க பொருட்கள் இருந்தன.
ரயில் பாதுகாப்பு அத்தியட்சகர் அனுர பிரேமரத்னவின் பணிப்புரையின் பேரில் உதவி பாதுகாப்பு அத்தியட்சகர் காமினி திஸாநாயக்கவின் தலையீட்டில் இந்த பையின் உரிமையாளரை தேடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய நாட்டின் அனைத்து ரயில் நிலையங்களிலும் ஒலிபெருக்கி மூலம் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பையில் இருந்த வங்கிப் புத்தகத்தின் முகவரியைக் கண்டுபிடித்த உதவிப் பாதுகாப்பு அதிகாரியால் தங்கம் உள்ளிட்ட பொருட்களை உரியவர்களிடம் கையளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Post a Comment