5 நாட்களில், 6 பேர் சுட்டுக்கொலை
இலங்கையில் கடந்த ஐந்து நாட்களில் 6 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவங்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 4 பேர் சம்பவ இடங்களிலும், இருவர் வைத்தியசாலைகளிலும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
Post a Comment