Header Ads



மக்களுக்கு கடல் நீரை குடிநீராக்கி வழங்கும் திட்டம் - 400 மில்லியன் டொலர்கள் செலவு


யாழ்ப்பாண மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் நோக்கில் புதிய கடல் நீரை சுத்திகரிக்கும் திட்டம் யாழ்ப்பாணம் வடமராட்சி தாளையடி பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, கடல் நீர் மிகவும் சுத்தமான நன்னீராக மாற்றப்படவுள்ளதுடன் யாழ்ப்பாணத்தில் உள்ள 70,000 குடும்பங்கள் அத்திட்டத்தின் மூலம் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்ள முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


இத்திட்டத்திற்காக செலவிடப்பட்ட தொகை 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பதுடன், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.


அடுத்த வருடத்தின் முதல் காலாண்டில் தாளையடி பிரதேசத்தில் புதிய திட்டத்தின் மூலம் யாழ்ப்பாண மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.