Header Ads



3 ஈரானியர்கள் கைது - பெரும் அபராதமும் விதிப்பு


சிங்கராஜா வனப்பகுதியில் ஈரானிய பிரஜைகள் மூவர் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் பாகங்களை சேகரித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.


இவர்களுக்கு உடுகம நீதவான் நீதிமன்றம் ஒரு கோடியே முப்பத்திரண்டு இலட்சம் ரூபா அபராதம் விதித்துள்ளது.


குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் தலா 44 இலட்சம் ரூபா அபராதம் விதித்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


ஈரானிய பிரஜைகள் மூவரும் அண்மையில் சிங்கராஜா வனப்பகுதியில் தாவர மற்றும் விலங்கு பாகங்களை சேகரித்துக்கொண்டிருந்த போது நெலுவ லங்காகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் நெலுவ வன அதிகாரிகள் குழுவினால் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.