குவைத்தில் தூக்கிலிடப்பட்டவரின் சடலத்தை பொறுப்பேற்க 3 மனைவிகளும், தாயாரும் மறுப்பு
- Ismathul Rahuman -
குவைத் நாட்டில் போதைப்பொருள் குற்றச்சாட்டில், குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு தூக்கிலிடப்பட்ட, இலங்கையரின் சடலத்தை அவரன் மூன்று மனைவிமாறும் பொறுப்பேற்க மறுத்தனால் அவரின் சகோதரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அநுராதபுரம், கல்கடவல, இசுருகமயைச்சேர்ந்த 46 வயதானவீரசிங்க ஆரச்சிலாகே ஜூட் ரவீந்திர என்பவரே போதைப் பொருள் குற்றச்சாட்டிற்காக குவைத்தில் தூக்கிலிட்டு கொல்லப்பட்டார். மரணமானவரின் சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் திடீர் மரண விசாரணை அதிகாரி டாக்டர் சிறி ஜயந்த விக்கிரமரத்ன முன்னிலையில் விசாரணை இடப்பெற்றது.
மரணமானவருடன் திருமணம் முடித்துள்ளதாக கூறப்படும் மூன்று மனைவிகளும் பூதவுடலை பொறுப்பேற்க மறுத்தனர்.
அவரது தாயாரும் பொறுப்பேற்க விருப்பம் தெரிவிக்காததினால்,அவரது சகோதரரான வீரசிங்க ஆரச்சிலாகே சமிந்த பெரேராவிடம் இறுதிச் சடங்குகளுக்காக பிரேதம் ஒப்படைக்கப்பட்டது.
பிரேத பரிசோதனை நடாத்திய பிரதான சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் இலங்கரத்ன பண்டா தனது அறிக்கையில் குவைத் நாட்டின் சட்டத்திற்கு அமைய தூக்கிலிட்டு சம்பவித்த மரணம் என குறிப்பிட்டிருந்தார்.
அன்னாரின் பூதவுடல் தொடர்பான இறுதிக்கிரிகைகள் நீர்கொழும்பு பொது மயானத்தில் இடம்பெற்றது.
Post a Comment