Header Ads



தந்தையின் கண்முன்னே வபாத்தான 3 பிள்ளைகள்




நிஷிதா (26),  ரமீஷா (23), ரின்ஷி (18)  பாலக்காடு அருகே மண்ணார்க்காடு கோட்டப்பாடம் ஜமாஅத் சேர்ந்த ரஷீத் என்பவரின் பெண் மக்கள்.


நிஷிதாவும் ரமீஷாவும் திருமணமான நிலையில் ரின்ஷி +2 மாணவி.


இவர்கள் மூவர் போக ரஷீதிற்கு இளைய மகன் ஒருவர் உண்டு.


ரஷீதின் மகன் சிறுநீரகம் பாதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில்,  அவரது தாயார் சிறுநீரக தானம் செய்ய அறுவை சிகிச்சை முடிந்து தாயும் மகனும் மருத்துவ ஓய்வில்.


மனைவியும், மகனும் நோயாளிகள் என்பதால் வீட்டு வேலைகளை ரசீத் கவனித்து வந்தார்.. நேற்று ஓணம் விடுமுறை என்பதால் கணவர் வீட்டில் இருந்த மூத்த மகள்கள் இருவரும் பெற்றோர் வீட்டுக்கு வந்தனர்.


இன்று மதியம் வீட்டிலுள்ள அழுக்கு துணிகளை துவைப்பதற்காக அருகில் உள்ள குளத்துக்கு ரசீத் கொண்டு சென்ற போது மகள்கள் மூவரும் வாப்பாவுடன் சென்றனர்.


ஒரு படித்துறையில் தந்தை துணி துவைக்க, அடுத்த படித்துறையில் மகள்கள் மூவரும் குளிக்க இறங்கினர். மூவரும் மகிழ்ச்சியாக தண்ணீரில் நேரத்தை கழிக்க, எதிர்பாராத விதமாக இளைய சகோதரி குளத்தின் ஆழத்தில் தவறி விழுந்து தடுமாற மூத்த சகோதரிகள் இருவரும் அவரை காப்பாற்றும் முயற்சியில் அவர்களும் மூழ்கிய சோகம்.


கண் முன்னே பெண் பிள்ளைகள் மூவரும் தண்ணீரில் மூழ்குவதை கண்ட வாப்பா ஓங்கி குரல் கொடுக்க கூட முடியாமல், சப்தம் வராமல் தளர்ந்து விழ குளக்கரை வழியாக சென்றவர்கள் தகவல் தெரிவித்து, தீயணைப்பு துறையினர் வந்து மூவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மூன்று சகோதரிகளும் வஃபாத் ஆன துரந்தம்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..


மூன்று பெண் மக்களை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு, இறைவன் பொறுமை வழங்குவானாக.


 Azheem

No comments

Powered by Blogger.