பேருந்தை சுற்றிவளைத்த அதிரடிப்படை - 3 கிலோ நாசகார பொருள் பிடிபட்டது
மன்னார் மதவாச்சி பிரதான வீதி உயிலங்குளம் பகுதியில் வைத்து சுமார் 3 கிலோ 394 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒரு வரை செவ்வாய்க்கிழமை (29) மாலை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
மன்னாரில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றில் போதைப்பொருள் கடத்தி செல்வதாக விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் உயிலங்குளம் பகுதியில் வைத்து குறித்த பேருந்தை விசேட அதிரடிப்படையினரால் நிறுத்தி சோதனைக்கு உட்படுத்திய போது மன்னார் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரை போதைப் பொருளுடன் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை மற்றும் அவரிடமிறுந்து மீட்கப்பட்ட 3 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஐஸ் போதைப்பொருளை உயிலங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்
Post a Comment