3 விடயங்களை முன்வைத்து நாடு பூராகவும், சைக்கிள் பயணத்தை ஆரம்பித்த எல்.ஏ.எம்.நப்ஸான்
போதைப்பொருளிலிருந்து இளைஞர்களை மீட்டெடுத்தல், வீதி விபத்துக்கள் தொடர்பாக விழிப்புணர்வூட்டல் , இலங்கையின் சுற்றுலா துறையை மேம்படுத்துதல் போன்ற மூன்று விடயங்களை முன்வைத்து நாடு தளுவிய ரீதியில் சைக்கிள் சுற்றுப் பயணத்தை ஆரம்பித்தார் புத்தளம், தில்லையடி இளைஞன் எல்.ஏ.எம்.நப்ஸான்
புத்தளம், தில்லையடி பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய எல்.ஏ.எம்.நப்ஸான் இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக சைக்கிள் சுற்றுப்பயணத்தை கடந்த செவ்வாய்க் கிழமை புத்தளத்திலிருந்து ஆரம்பித்துள்ளார்.
இவரது இந்த முயற்சியினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் புத்தளம் நகரசபை செயலாளர், புத்தளம் வர்த்தக நலன்புரிச் சங்க பிரதிநிதிகள், லெகூன் இளைஞர் அமைப்பினர் மற்றும் பிரதேசவாசிகள் கலந்து கொண்டனர்.
(அஸ்ஹர் இப்றாஹிம்)
Post a Comment