33 பில்லியன் ரூபா நட்டத்தை தவிர்க்க, மக்களின் தலையில் சுமை
மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று காரணங்களை அடிப்படையாகக் கொண்டு மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
500 கிகாவாட் மணித்தியாலங்கள் மின்சாரத்தை கொள்வனவு செய்ய வேண்டிய தேவை, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மற்றும் வேறு விநியோகஸ்தர்களுக்கு செலுத்தப்பட வேண்டிய நிலுவைக் கட்டணத்திற்கான நிதியைப் பெற்றுக்கொள்தல் மற்றும் எதிர்பார்க்கப்பட்டுள்ள 33 பில்லியன் ரூபா நட்டத்தை தவிர்த்தல் ஆகிய மூன்று காரணிகளே மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனையினூடாக முன்வைக்கப்பட்டுள்ளன.
குறித்த அனைத்து காரணிகளையும் தரவுகளின் அடிப்படையில் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிராகரித்துள்ளார்.
நியாயமற்ற முறையில் இலாபமீட்ட இடமளிப்பது தமது ஆணைக்குழுவின் பொறுப்பல்ல என்பதன் காரணமாக மின் கட்டணத்தை அதிகரிக்க அனுமதி வழங்க முடியாது என இலங்கை மின்சார சபைக்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு கடந்த 28 ஆம் திகதி அறிவித்துள்ளது.
Post a Comment