Header Ads



நாட்டில் 30000 தாதியர்களுக்கும், 3000 வைத்தியர்களுக்கும், 600 மருத்துவ நிபுணர்களுக்கு தட்டுப்பாடு


நாட்டில் 3000-இற்கும் மேற்பட்ட வைத்தியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


இதில், 600-க்கும் அதிக விசேட வைத்திய நிபுணர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாக அமைச்சு கூறியுள்ளது.


தாதியர் சேவையில் 30,000இற்கும் அதிகமான வெற்றிடங்கள் நிலவுவதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் மெதவத்த தெரிவித்துள்ளார்.


தாதியர்களை பயிற்சியில் இணைத்துக்கொள்வதில் நிலவும் தாமதத்தினால் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தாதியர் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

மூன்று வருடங்களாக உயர் மட்ட தாதியர்கள் பயிற்சிக்கு உள்வாங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.