Header Ads



முஸ்லிம்களின் கட்டிடங்களை புல்டோசரினால் தகர்ப்பது நியாயமா...? 2 முகங்ளை காட்டும் தொண்டமான்கள்


மலையகத்துக்கு ஒருமுகத்தையும் மலையகத்துக்கு வெளியே கிழக்கில் ஒரு முகத்தையும் காட்டும் தொண்டமான்களுக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கும் இரட்டை முகங்களா? இதில் யார், எங்கு செய்வது சரி, பிழை என்று மக்கள் அறிந்துகொள்வதே கடினமாக உள்ளது. 


கடந்த காலங்களில் விடுதலைப்புலிகளினால் கையகப்படுத்தப்பட்ட முஸ்லிங்களின் காணிகளுக்கு வகை கூறுவது யார்? இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கொள்கைகளை ஆளுநர் செந்திலுக்கு அமைச்சர் ஜீவன் எடுத்துரைப்பது காலத்தின் தேவையாக உள்ளது என ஜனாதிபதி செயலணியின் முன்னாள் உறுப்பினரும், கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ. கலீலுர்ரஹ்மான் தெரிவித்துள்ளார். 


சமீபத்தைய அரசியல் போக்குகள் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 


தோட்ட தொழிலாளர்களுக்கு தோட்டங்களின் நிர்வாகங்கள் வீடுகளை அமைத்து கொடுக்க வேண்டும், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கவேண்டும் என்ற வாதத்தை கொண்டிருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் வாதம் வரவேற்ககூடியது. அது தோட்டத்துக்கு சொந்தமான காணியாக இருந்தாலும் சரி, தோட்ட உரிமையாளருக்கு சொந்தமான காணியாக இருந்தாலும் சரி, தோட்டத்தில் வேலைசெய்பவர்களுக்கும் அதில் பங்குண்டு என்ற கொள்கையை  கொண்டிருக்கிறார். 


பாதிக்கப்பட்ட அந்த தொழிலாளி இருந்த காணி சட்டவிரோதமானதல்ல என்கின்ற தொனியில் மக்களுக்கு ஆதரவாக போராடி தனது மக்களுக்கு உரிமைகளை பெற்றுக்கொடுத்த விதம் பாராட்டக்கூடியது. அவரின் இப்படியான செயற்பாடுகளை பாராட்டுகிறோம். இப்படியான தலைவர்களே இன்றைய தேவையாகவும் உள்ளது. 


ஆனால் அவரது கட்சி தலைவர் செந்தில் தொண்டமான் கிழக்கு மாகாண ஆளுநராக இருந்து கொண்டு கடந்த காலங்களில் விடுதலை புலிகளின் அராஜகத்தினால் வடக்கு கிழக்கில் உள்ள முஸ்லிங்களிடமிருந்து பிடுங்கி பெறப்பட்ட காணிகளில் மீள குடியேறும் போது, யுத்தகாலத்தில் வெளிநாட்டில் உல்லாசம் அனுபவித்துக் கொண்டு தமிழ், முஸ்லிம் மக்களின் யுத்த கஷ்டங்கள் எதையும் அறியாமல் அடியும் தெரியாமல் நுனியும் தெரியாமல் இருந்துவிட்டு இப்போது நாட்டை சீரழித்துக்கொண்டிருக்கும் சாணக்கியன் போன்ற சில இனவாதிகளின் கதைகளை கேட்டுக்கொண்டு புல்டோசரை கொண்டு கட்டிடங்களை உடைப்பது பற்றி அமைச்சர் ஜீவனின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி எங்களுக்கு எழுகிறது. 


காடையர்கள் மலையக மக்களுக்கு அநீதியிழைத்தபோது நீதியை நிலையாட்டிய அமைச்சர் ஜீவன் ஒருபக்கமும், முஸ்லிங்களின் இருப்பை கேள்விக்குட்படுத்தி புல்டோசரை கொண்டு உடைக்கும் ஆளுநர் செந்தில் ஒருபக்கமும் இருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கொள்கை நிலைப்பாடு என்ன? இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கொள்கைகளை ஆளுநர் செந்திலுக்கு அமைச்சர் ஜீவன் எடுத்துரைப்பது காலத்தின் தேவையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.