"2 வது முறையாக தந்தையின் பொறுப்பை பெற்றது மகிழ்ச்சி, புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது"
சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான நமல் ராஜபக்ஷ மற்றும் மனைவி லிமினி வீரசிங்க ஆகியோருக்கு குழந்தையொன்று பிறந்துள்ளது.
இவர்களுக்கு ஏற்கனவே கேசர ராஜபக்ஷ என்ற மூன்று வயது மகன் இருக்கின்றார்.
இந்நிலையில், தற்போது பிறந்துள்ள குழந்தை பற்றி அவர் அவருடைய டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
"இரண்டாவது முறையாக ஒரு தந்தையின் பொறுப்பை பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. முன்பை விட அதிகப் பொறுப்பு இருக்கின்றது.
லிமினி மற்றும் குழந்தை இருவரும் ஆரோக்கியமாக உள்ளனர், நான்கு பேர் கொண்ட எங்கள் குடும்பம் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது“ என குழந்தைய கையில் ஏந்தியவாறு அழகிய புகைப்படத்தை பகிர்ந்து குறிப்பிட்டுள்ளார்.
ஆனாலும் பிறந்துள்ள குழந்தை, ஆண் குழந்தையா பெண் குழந்தையா என அவர் கூறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Podi Maina!
ReplyDelete