Header Ads



2 சிங்கக் குட்டிகளுக்கு, பெயர் சூட்ட அரிய வாய்ப்பு


ரிதியகம சபாரி விலங்கியல் பூங்காவில் “சினா” என்ற பெண் சிங்கம் ஈன்ற இரண்டு சிங்கக்குட்டிகள் பொது மக்களின் பார்வைக்கு விடப்பட்டுள்ளன.


இதனடிப்படையில் குறுகிய காலத்திற்கு சிங்கக்குட்டிகள் பொது மக்களின் பார்வையிடலாம் என ரிதியகம விலங்கியல் பூங்காவின் உதவி பொறுப்பாளர் ஹேமந்த சமரசேகர தெரிவித்துள்ளார்.


இந்த சிங்கக்குட்டிகளை ஈன்ற “சினா” என்ற பெண் சிங்கம் இதற்கு முன்னர் மூன்று முறை 9 குட்டிகளை ஈன்றுள்ளது. இந்த குட்டிகளுடன் ரிதியகம சபாரி விலங்கியல் பூங்காவில் மொத்தமாக 18 சிங்கக்குட்டிகள் பிறந்துள்ளன.


புதிதாக பிறந்துள்ள சிங்கக்குட்டிகளுக்கு இதுவரை பெயரிடப்படவில்லை. சிங்கக்குட்டிகளுக்கு பெயர்களை பரிந்துரைக்கும் வாய்ப்பை விலங்கியல் பூங்கா, முகநூல் மூலம் சிறார்களுக்கு வழங்கியுள்ளது.


பரிந்துரைக்கும் சிறந்த பெயர்கள் இந்த சிங்கக்குட்டிகளுக்கு சூட்டப்பட உள்ளதுடன் பெயர்களை பரிந்துரைத்த சிறுவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும் என ஹேமந்த சமரசேகர கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.