230 மருந்துகளுக்கு தட்டுப்பாடு
நாட்டில் தட்டுப்பாடு நிலவும் மேலும் 50 வகையான மருந்துகள் எதிர்வரும் 2 வாரங்களுக்குள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, நாட்டில் தற்போது நிலவும் மருந்து தட்டுப்பாடு குறைவடையுமென அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தற்போது மருத்துவ விநியோகத் துறையில் 230 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது.
அந்த மருந்துகள் அனைத்தும் உடனடியாக இறக்குமதி செய்யப்படும் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்திய கடன் உதவியின் கீழ் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
Post a Comment