கர்ப்பிணி மனைவியை 22 KM சுமந்துசென்ற கணவனின் தற்போதைய நிலை
இச்சம்பவம் கடந்த 2021 ஆம் ஆண்டு காலி ஹினிதும பிரதேசத்தில் இடம்பெற்றது.
அனால் இப்போது குறித்த மனைவி கணவனையும் குழந்தையும் பிரிந்து வேறுவொருவருடன் வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
மனைவிக்கு குழந்தை பிறக்க இருக்கும் அந்த நேரத்தில் அன்பான கணவனாக இருந்த குமார, வெள்ளத்தின் நடுவே தன் கர்ப்பிணி மனைவியை தூக்கியப்படி மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். அவரது முயற்சிகள் சமூக ஊடகங்கள் மூலம் பிரபலமாகி பலரும் புகழ்ந்தனார்.
எஸ். எஸ். குமார இலங்கையின் சமூக ஊடகங்களில் அக்காலத்தின் மிகவும் அன்பான கணவர் என்று எல்லோராலும் பாராட்டப்பட்டார்.
உள்ளூர் சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவ கவனிப்பின் அவசியத்தை அவர்களுக்கு அறிவித்தார், ஆனால் வெள்ளம் காரணமாக ஒரு ஆம்புலன்ஸ் கூட அவர்களின் இடத்திற்குச் செல்ல முடியவில்லை.
இவ்வாறான நிலையில் 7 மாத கர்ப்பிணியான மனைவி திடீரென சுகயீனமடைந்துள்ளார். வயிற்றிலுள்ள குழந்தையின் எவ்வித அசைவுகளும் இல்லை என மனைவி குறிப்பிட்டுள்ளார்.
குடும்ப சுகாதார அதிகாரியை தொடர்பு கொண்ட போது 5 மணித்தியாலங்களுக்குள் மனைவியை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு குறிப்பிட்டுள்ளனர்.
முழு பிரதேசமும் நீரில் மூழ்கியுள்ளதுடன், பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் மனைவியை வைத்தியசாலைக்கு தூக்கி செல்ல சுரேஷ் முடிவுசெய்தார்.
அதற்கமைய வைத்தியசாலைக்கு மனைவியை தூக்கி சென்று கணவன் சுரேஷ் குமார் அனுமதித்துள்ளார்.
இதனையடுத்து, மனைவியும் குழந்தையும் ஆபத்தின்றி உயிர் தப்பியதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த செய்தியை தொலைக்காட்சியில் பார்த்த மக்கள் சுரேஷ் குமார் வீட்டிற்கு சென்று தொடர்ந்து உதவி செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு இருக்கையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, யூடியூப் சேனல் ஒன்று இந்த சம்பவத்தை பின்தொடர்ந்தது.
காதலும் கசக்கும் என்ற வகையில் குழந்தையின் தாய் குழந்தை பிறந்து 9 மாதங்களில் குழந்தையையும் தந்தையையும் விட்டுவிட்டு வேறொரு நபரிடம் சென்று வாழ்ந்து வருகின்றர்.
Post a Comment