Header Ads



2068 ஆம் ஆண்டில், இலங்கை எப்படியிருக்கும் தெரியுமா..?


நாடு வங்குரோத்தடையக் காரணமானவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்க "பொருளாதார நீதி ஆணைக்குழு” ஒன்றை ஐக்கிய குடியரசு முன்னணி ஏற்பாடு செய்யுமென அக்கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.  


ஜஸ்லாந்தில் செய்ததைப் போல் வங்குரோத்து நிலைக்கு காரணமான அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளைக் கண்டறிந்து தண்டனை வழங்கி நீதியை நிலைநிறுத்தாவிட்டால் 2068 ஆம் ஆண்டிலும் நாடு வங்குரோத்திலிருந்து மீளாது என அவர் தெரிவித்தார்.


பாணந்துறை நகர மண்டபத்தில் நடைபெற்ற ஐக்கிய குடியரசு முன்னணியின் களுத்துறை மாவட்ட சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


"கிரீஸ், ஆர்ஜென்டீனா மற்றும் லெபனான் ஆகிய நாடுகளும் இவ்வாறு வங்குரோத்தடைந்தன. அதற்கு காரணமான அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளை இனங்கண்டு அவர்கள் தண்டிக்கவில்லை. அதனால் தான் 10 - 15 வருடங்கள் கடந்தும் இன்னும் அந்த நாடுகளால் வங்குரோத்து நிலையிலிருந்து வெளிவர முடியவில்லை.  


ஐஸ்லாந்து எவ்வாறு ஆரம்பித்தது? நாட்டின் திவால் நிலைக்குக் காரணமான அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் வங்கி உத்தியோகத்தர்க்ள என 11 பேரைக் கைது செய்ததுடன் அவர்களின் வேலை தொடங்கியது. அதன் விளைவு என்ன? வெறும் மூன்றே வருடங்களில் ஐஸ்லாந்து திவால் நிலையிலிருந்து வெளிவந்து அபிவிருத்தியடைந்த நாடாக மாறியது” என அவர் மேலும் தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.