2048 இல் பயணிகள் போக்குவரத்து சேவையில் மின்சாரப் பேருந்துகள்
இது தொடர்பான பூர்வாங்க நடவடிக்கைகள் அடுத்த சில மாதங்களில் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்துப் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொதுப் போக்குவரத்துத் துறையில் நீண்டகாலமாக நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கித் தேசிய போக்குவரத்துக் கொள்கை மற்றும் இலத்திரனியல் பயணச்சீட்டுகளை அறிமுகப்படுத்துவதற்கும் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
பயணிகள் பயணச்சீட்டு கொள்வனவு செய்வதில் ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்க்கும் வகையில் இலத்திரனியல் பயணச்சீட்டு முறை முன்மொழியப்பட்டுள்ளதாகவும் இதற்கு நிதியமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அதேநேரம் 7 தேசிய பேருந்து சங்கங்களும் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அது தொடர்பில் மாகாண மட்டத்தில் விரைவில் கருத்துக்கள் பெறப்படும் என இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண குறிப்பிட்டுள்ளார்.
9 மாகாணங்கள் தொடர்பில் 09 பிரதிநிதிகளை நியமித்துத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு அறிவிக்குமாறும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment