Header Ads



2012 இல் உயிர் தப்பியவர், நேற்றைய விமான விபத்தில் உயிர் துறந்தார்


பிப்ரவரி 13, 2012 அன்று, PT-06 பயிற்சி விமானத்தின் விமானி, தளபதி தரிந்து ஹேரத், தனது MiG -27 போர் விமானம், தும்மலசூரியவில் உள்ள தென்னந்தோப்பில் விழுந்து விபத்துக்குள்ளானதில், அதிர்ஷ்டவசமாக பரசூட் மூலமாக உயிர் தப்பினார்.


குறித்த MIG-27 போர் விமானமானது வழக்கமான பயிற்சியின் போது தும்மலசூரிய பகுதியில் விபத்துக்குள்ளானதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பின் அதன் விமானி தரிந்து ஹேரத் ஒரு கட்டுப்பாட்டு வெளியேற்ற முறைமை மூலமாக அதிலிருந்து தப்பி உயிர் பிழைத்தார்.


குருநாகல் மலியதேவ ஆண்கள் கல்லூரியின் பழைய மாணவரான தளபதி தரிந்து ஹேரத் 2006 ஆம் ஆண்டு பொதுப் பணிகளுக்கான விமானிகள் கிளையில் 49 ஆவது ஆட்சேர்பில் கடெட் அதிகாரியாக இலங்கை விமானப்படையில் இணைந்து கொண்டார் .


அத்துடன் குருநாகல் புனித. மரியாள் கல்லூரியின் பழைய மாணவரான அதிகாரி பெஷான் வர்ணசூரிய, 2017 ஆம் ஆண்டில் இலங்கை விமானப்படையில் கடெட் அதிகாரியாக சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் விமான மற்றும் பொறியியல் கிளையில் இணைந்து கொண்டார்.


நேற்று சீனன்குடா பகுதியில் நடந்த PT-06 விமான விபத்தில் மேற்குறித்த இலங்கை விமானப் படை அதிகாரிகள் இருவருமே உயிரிழந்தனர்.

No comments

Powered by Blogger.