எந்த நிபந்தனைகளும் இன்றி இலங்கைக்கு முதலாவதாக 200 மில்லியன் டொலர் கடனை வழங்கியது பங்களாதேஷ்தான்
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் இதுவரை 74 கருத்தரங்குகளை பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்களுக்காக நடத்தி இருக்கிறது. இதன் மூலம் மாணவர்கள் மத்தியிலே நாங்கள் ஊடகத்தைப் பற்றிய ஆர்வத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றோம். அதில் நாங்கள் வெற்றியும் கண்டிருக்கின்றோம்.
இன்று இந்நிகழ்வுக்குப் பிரதம அதிதியாக பங்களாதேஷின் உயர் ஸ்தானிகர் வருகை தந்திருக்கின்றார். பங்களாதேஷைப் பொறுத்த வரையில் ஒரு காலத்தில் வறிய நாடாக இருந்தது. இன்று அந்த நிலை மாறி அங்கே இருக்கின்ற ஆட்சியாளர் ஷேக் ஹஸீனாவின் தலைமையில் அந்த நாடு முன்னேற்றம் கண்டுள்ளது. இலங்கை நிதி நெருக்கடியை எதிர்கொண்டபோது முதலாவதாக இலங்கைக்கு எந்த நிபந்தனைகளும் இன்றி 200 மில்லியன் டொலர் கடனை பங்களாதேஷ் வழங்கி இருக்கின்றது.
எமது தாய் நாட்டுக்கு பங்களாதேஷ் செய்த உதவியை இச்சந்தர்ப்பத்தில் நாங்கள் நன்றியுடன் நினைவு கூருகின்றோம். பங்களாதேஷ் ஒப்பீட்டு அளவில் ஊடகத்துறையிலே வளர்ச்சி கண்டு வரும் ஒரு நாடு.
எமது அங்கத்தவர்களுக்கு ஊடகப் பயிற்சிகளைப் பெற்றுத் தர தூதுவர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போரத்தின் தலைவர் வேண்டுகோள் விடுத்தார்.
Post a Comment