Header Ads



162 ஆயிரம் ரூபாய்க்கு மாம்பழம்


மாம்பழம் ஒன்று 162 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்திற்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம்,   வவுனியா உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவில் இடம்பெற்றுள்ளது.


உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மகோற்சவ உற்சவத்தின் 06ம் நாள் மாம்பழ திருவிழாவான சனிக்கிழமை (26) மாலை விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழம் ஒன்று கோவில் வளர்ச்சி நிதிக்காக ஏலத்தில் விடப்பட்டது.


இதன்போது, பலத்த போட்டிக்கு மத்தியில் வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் வசிக்கும் ச.சிந்துஜா என்பவர், 162 ரூபாய்க்கு குறித்த மாம்பழத்தை ஏலத்தில்  கொள்வனவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.    


  க. அகரன்

1 comment:

  1. தலைகாய்ந்த ஏலவிற்பனை,

    ReplyDelete

Powered by Blogger.