குழந்தை நடிகையின் போலி அரைநிர்வாண, வீடியோவை பரப்பிய 15 வயது மாணவன்
பிரபல குழந்தை நட்சத்திரத்தின் போலி அரை நிர்வாண வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவதாக சம்பந்தப்பட்ட மாணவியின் தாயார் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் சமீபத்தில் முறைப்பாடு அளித்திருந்தார்.
அதன்படி, பெலியத்த பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர் ஒருவர் இது தொடர்பான வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாக விசாரணைகளை மேற்கொண்ட உரிய பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
பின்னர் அந்த பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று (23) கைது செய்யப்பட்டார்.
ஒன்லைன் முறை மூலம் நடத்தப்படும் மேலதிக வகுப்புகளுக்கு தனது தாயின் கைபேசியை எடுத்துச் சென்றதாகவும், அது தொடர்பான வீடியோ அதில் இணைந்த வாட்ஸ்அப் குழுவில் வெளியிட்டதாகவும் சந்தேகநபரான மாணவர் விசாரணை அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
குறித்த போலியான காணொளி வேறு ஒருவரிடமிருந்து பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மாணவன் விசாரணை அதிகாரிகளிடம் கூறினாலும் குறித்த நபர் யார் என இதுவரை தெரிவிக்கவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இதன்படி, சந்தேகத்திற்குரிய பாடசாலை மாணவர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
பின்னர் சந்தேகநபரான மாணவர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment