14 நாட்களுக்குள் 10 பில்லியன் கேட்கும் அநுரகுமார
கொழும்பில் கடந்த 19 ஆம் திகதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போது அனுரகுமார திஸாநாயக்க தொடர்பில் அவதூறாக கருத்து வெளியிட்டமை தொடர்பில் நட்டஈடு கோரியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, சாகர காரியவசம் மற்றும் திஸ்ஸ குட்டியாராச்சி ஆகிய இருவரும் 14 நாட்களுக்குள் நட்டஈட்டுத் தொகையினை செலுத்துமாறு வலியுறுத்தி சட்டத்தரணி சுனில் வட்டகல ஊடாக இந்தக் கோரிக்கை கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இரண்டு வாரங்களுக்குள் குறித்த தொகையினை செலுத்தாத நிலையில் இருவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சாகர காரியவசம் மற்றும் திஸ்ஸ குட்டியாராச்சி ஆகிய இருவரும் வெளிப்படுத்திய கருத்துக்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை எனவும், அவதூறு பரப்பும் வகையில் அமைந்துள்ளதாகவும் தமக்கு அறிவுறுத்தப்பட்டதாக சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
Post a Comment