பிரதமர் பதவியில் மாற்றமா..? 12 பில்லியன் டொலர்களுடன் எரிக் சொல்ஹெய்மின் பங்களிப்பு என்ன..??
இலங்கையில் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் பிரதமர் பதவியிலிருந்து தினேஷ் குணவர்தனவை நீக்கிவிட்டு வேறு ஒருவரை அப்பதவிக்கு நியமிக்க மேற்குலக தூதரகம் இரகசிய சதியை ஆரம்பித்துள்ளதாக கொழும்பில் உள்ள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்படும் தினேஷ் குணவர்தனவிற்கு பல சக்திவாய்ந்த அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதற்கு பிரதமரும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போதைய ஜனாதிபதியின் வருகைக்கு சம்பந்தப்பட்ட தூதரகமும் ஆதரவு தெரிவித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் கரியமில வைப்பு கொள்கையின் கீழ் இலங்கைக்கு 12 பில்லியன் டொலர்கள் கிடைக்க உள்ளதாகவும், இது முன்னாள் நோவிடன் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்மின் உதவியுடன் பெறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பணத்தில் ஜனாதிபதி தேர்தல் அல்லது தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Post a Comment