பொருட்களின் விலை 128 வீதத்தால் அதிகரிப்பு, சம்பள உயர்வோ இல்லை - மக்களின் வாங்கும் சக்தி வீழ்ந்தது
மக்களால் தாங்க முடியாத அளவுக்கு உணவுப் பொருட்களின் விலை 128 வீதத்தால் அதிகரித்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.
பணவீக்கம் தொடர்பில் சனத்தொகை புள்ளிவிபர திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அண்மைய அறிக்கைகளில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உணவு அல்லாத பொருட்களின் விலை மட்டம் 87 வீதத்தால் அதிகரித்துள்ளதாக பேராசிரியர் தெரிவித்தார்.
நுகர்வோர் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை மட்டத்தில் சராசரியாக நூற்றுக்கு மூன்று வீத அதிகரிப்பு காணப்படுவதாகத் தெரிவித்தார்.
கொழும்பு நகர எல்லையில் உணவுப் பொருட்களின் விலை 136 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் மக்களின் வருமானத்தின் உறுதியான பெறுமதி குறைந்துள்ளதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
2019ஆம் ஆண்டிற்குப் பின்னர் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படாததன் காரணமாக மக்களின் வாங்கும் சக்தி வெகுவாகக் குறைந்துள்ளதாகவும் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.
Post a Comment