இனிமேல் 10 ஆம் தரத்தில் O/L பரீட்சையா..?
பத்தாம் தரத்தில் கல்விப் பொதுத் தராதர பரீட்சை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது ஆராயப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார்.
கொழும்பு றோயல் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஆரம்ப காலத்தில் மாணவர்கள் 10 ஆம் தரத்தில் பொதுப் பரீட்சையை எதிர்கொண்டதாகவும், பின்னர் அது 11 ஆம் தரத்திற்கு ஒரு வருடத்தினால் நீடிக்கப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அதன்படி, 10ம் தரப் பொதுப் பரீட்சையை நடத்துவது தொடர்பில் உரிய தரப்பினருடன் தற்போது கலந்துரையாடி வருவதாகவும், எதிர்காலத்தில் கல்வி மாற்றத்திலும் இந்த விடயம் பரிசீலிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment