Header Ads



ஆசிய 'வூசு' (WUSHU) போட்டியில், தங்கப்பதக்கம் வென்று சாதனை


ஆசிய 'வூசு' (WUSHU) போட்டியில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.


தாய்லாந்தில் கடந்த 11ஆம் திகதி நடைபெற்ற ஆசிய 'வூசு' (WUSHU) போட்டியில், பங்குகொண்டு இந்த சாதனையை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மத்திய மாகாணம், கண்டி மாவட்டத்துக்குற்பட்ட கம்பளை பகுதியை சேர்ந்த கணேசன் சுதாகரன் என்பவரே இந்த சாதனையை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சுதாகரன் தனது ஆரம்பக் கல்வியை கம்பளை இந்து கல்லூரியிலும், இடைநிலைக் கல்வியை கண்டி ரணபிம் ரோயல் கல்லூரியிலும் பயின்றுள்ளார்.


இந்நிலையில் இலங்கைகக்கும் மலையக மண்ணுக்கும் பெருமை சேர்த்த சுதாகரனுக்கு பல தரப்பினரும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

No comments

Powered by Blogger.