மரணம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஐவரடங்கிய குழுs
விசேட வைத்திய நிபுணர்கள் அடங்கிய குழு நாளைய தினம் (15) பேராதனை வைத்தியசாலைக்கு சென்று விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
எவ்வாறாயினும், யுவதிக்கு வழங்கப்பட்ட ஊசி, மரணத்தை ஏற்படுத்தவில்லை என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
இந்த விடயத்தை sசந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்க குறித்த விசாரணைக்குழுவிற்கு இயலுமானதாக இருக்கும் எனவும் அமைச்சர் நம்பிக்கை வௌியிட்டார்.
குறித்த ஊசி செலுத்தப்பட்ட மேலும் 12 பேர் தற்போதும் பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல சுட்டிக்காட்டினார்.
21 வயதான சமோதி சந்தீபனி வயிற்றுப்போக்கு காரணமாக கடந்த வாரம் கெட்டப்பிட்டிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அன்று இரவு அந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று, கடந்த திங்கட்கிழமை காலை பேராதனை போதனா வைத்தியசாலைக்கு அவர் மாற்றப்பட்டார்.
அவருக்கு ஊசி ஏற்றபட்டதன் பின்னர் நிலைமை மோசமடைந்து அவர் உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் குழு வெற்றிகரமான தீர்மானம் எடுத்து இந்த அப்பாவிப் பெண்ணை உயிர் கொடுக்க முடியாது. எனவே அந்த நச்சு மருந்தை இறக்குமதி செய்ய அனுமதியளித்த அதற்காக கொமிசன் பெற்று மோசடி செய்த அத்தனை பேரையும் நீதிமன்றத்தில் நிறுத்தி, தராதரம் பார்க்காது குற்றவாளிகளைச் சிறையிலடைத்து அவர்களி்டன் 5 கோடிக்குக் குறையாத நட்டஈடைப் பெற்றுக் கொடுக்குமாறு இந்த நாட்டு பொது மக்கள் சார்பாக வேண்டிக் கொள்கின்றேன்.
ReplyDelete