O/L, A/L பரீட்சைகள் குறித்து கல்வியமைச்சரின் அறிவிப்பு
கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை இந்த ஆண்டு இறுதிக்குள் இடம்பெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.
கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சையை அடுத்த ஆண்டு முற்பகுதியில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
முன்னதாக, கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சையை இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும், சாதாரண தர பரீட்சையை இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் இன்று அறிவித்தார்.
Post a Comment